Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கடல்சார் அனர்த்தங்கள் தொடர்பில் அறியப்படுத்த அவசரத் தொடர்பு இலக்கம் அறிமுகம்!


போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகொன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


குறித்த படகு தொடர்பில் மேலதிக தகவல்கள் வழங்கப்படுமென இலங்கை கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


இதற்கிடையில், கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தவும், கடல்சார் அனர்த்தங்கள் ஏற்படுமாயின் அது தொடர்பில் அறியப்படுத்தவும் கடலோரக் காவல்துறை 106 என்ற அவசரத் தொடர்பு இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 


குறித்த எண் 24 மணிநேரச் சேவையில் இருக்கும் எனவும் எந்த ஒரு அவசர நிலையிலும் தகவல்களை வழங்கக் கடலோரக் காவல்துறைக்கு நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


@CM

Tags

ads