Type Here to Get Search Results !
Developed by Cleverbit

சிட்டிசன் ஊடக குழுமத்தின் அறிவிப்பாளர் அஸ்வத்கான் பாத்திமா பர்வின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் Project Management துறையில் BBM (Hons) பட்டம் பெற்றார்!


சிட்டிசன் ஊடக குழுமத்தின் பாராட்டு செய்தி


பட்டமளிப்பு விழாவின் வெற்றிக்கோலம்!


சிறந்த ஆளுமை, வாக்கு வளமிக்க சிட்டிசன் ஊடக குழுமத்தின் அறிவிப்பாளர், தீராத முயற்சியின் சின்னமாகத் திகழும் அஸ்வத்கான் பாத்திமா பார்வின் அவர்களுக்கு, சிட்டிசன் ஊடக குழுமத்தின் உளம் கனிந்த வாழ்த்துகள்!


உயர்கல்வியில் நெடுந்தூரம் பயணித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து Project Management துறையில் BBM (Hons) பட்டம் பெற்று, உங்கள் இலட்சியத்தை நோக்கி வெற்றியைத் தழுவியதற்காக பெருமிதம் கொள்கின்றோம்.


உங்கள் கல்விப் பயணத்தில் எதிர்நீச்சலாக இருந்த கஷ்டங்களையும், அர்ப்பணிப்புடன் கடந்து, இன்று சாதனையின் உச்சியில் உயர்ந்து நிற்பது உங்கள் விடாமுயற்சிக்கும் உழைப்புக்கும் ஜெயகீதம் பாடுகிறது. உங்கள் பெற்றோர்களின் அன்பும், அவர்களின் அர்ப்பணிப்பும், இன்று உங்கள் வெற்றியின் ஒளியில் வெளிச்சமாய் பளிச்சிடுகின்றன.


சமூகத்தின் வளர்ச்சிக்கும், ஊடக உலகின் ஒளியூட்டலுக்கும் நீங்கள் ஆற்றும் பணி பாராட்டுக்குரியது. உங்கள் எதிர்காலப் பயணம் மேலும் சிறக்க, புதிய உயரங்களை அடைய, சிட்டிசன் ஊடக குழுமத்தின் முழு மனதார்ந்த வாழ்த்துகள்!


"உயர்வென்று நிலைபெறும் உழைப்பின் வெற்றி காணவேண்டும்!"


சிட்டிசன் ஊடக குழுமம்

Tags

ads