Type Here to Get Search Results !
Developed by Cleverbit

செயலிழந்தது WhatsApp - பயனர்கள் அதிர்ச்சி!


உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான WhatsApp பயனர்கள் இன்று (12) செயலிக்கான அணுகலின்போது சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இதன்படி வாட்சப் செயலியின் ஊடாக குறுஞ்செய்திகளை அனுப்பவோ,

குழுக்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளவோ முடியவில்லை என பயனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இதைத்தொடர்ந்து, பயனர்கள் டவுன் டிடெக்டர் வழியாக தங்களது சிக்கல்களை முறைப்பாடளித்துள்ளனர்.


இதுகுறித்து டவுன் டிடெக்டர் கூறுகையில், "சுமார் 89% பயனர்கள் தகவல்களை அனுப்புவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர். அதே நேரத்தில் 4 சதவீதமானோர் தகவல்களைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களைச் சந்தித்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.


@CM

Tags

ads