Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி பலி!


வெலம்பொட காவல்துறை பிரிவிற்குட்பட்ட கோவில்கந்த பகுதியில் சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி நேற்று (20) மாலை உயிரிழந்ததாக வெலம்பொட காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


கோவில்கந்த, வட்டப்பொல பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.


வீட்டின் மேல் தளத்தில் உள்ள மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததனால் சிறுமி உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெலம்பொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


@CM

Tags

ads