இந்தியாவின் - கேரளா மாநிலத்தின் பல பகுதிகளில் மீண்டும் 'நிபா' வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த வருடம் கேரளாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் 'நிபா வைரஸ்' தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார்.
இதனையடுத்து, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்தநிலையில், நேற்று மீண்டும் மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளில் இரண்டு பேருக்கு குறித்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்தே, குறித்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
@CM