Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

கர்ப்பிணித் தாய்மார்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் கலாசாரம்!


தெஹிவளை, கல்கிஸ்ஸை, ரத்மலானை, மொரட்டுவ மற்றும் எகொட உயன உள்ளிட்ட இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்களிடையே மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இது கடுமையான சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தெஹிவளை-கல்கிஸ்ஸை மாநகரசபையின் உறுப்பினரான சமல் சஞ்சீவ கூறியுள்ளார். 


அதேநேரம் குறித்த பெண்கள் கரையோரப்பகுதியில் மது மற்றும் போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும் சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார். 


 

இது, பாரிய பொது சுகாதாரப் பிரச்சினை என்றும், அதை சுகாதாரத் துறையால் மட்டும் கையாள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். 

 

எனவே இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண, பொதுப் பாதுகாப்பு அமைச்சும் மற்றும் பிற அரசத் துறைகளின் ஆதரவு தேவை என்றும், தெஹிவளை-கல்கிஸ்ஸை மாநகர சபையின் உறுப்பினர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். 

 

இந்த கர்ப்பிணிப் பெண்களில் பெரும்பாலானோர் சுகாதார அதிகாரிகளிடம் தங்களைப் பதிவு செய்வதை அல்லது பரிசோதனைக்காக மருத்துவமனைகளுக்குச் செல்வதை தவிர்ப்பதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


@CM

Tags

ads