நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலையைத் தொடர்ந்து, வறட்சிக்குள்ளான சில பகுதிகளுக்கு எதிர்வரும் காலங்களில் கொள்கலன் தாங்கி ஊர்தி மூலம் நீரை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இருப்பினும், தற்போது அவ்வாறான சூழ்நிலை ஏற்படவில்லை.
வறட்சியான வானிலை காரணமாக நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைந்து வருவதால், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நுகர்வோருக்கு அறிவித்துள்ளது.
@CM