2026 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கு வசதியான, வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான பணப் பரிவர்த்தனை முறையை வழங்குவதற்காக, முஸ்லிம் மத கலாசார விவகாரத் துறை (DMRCA), அமானா வங்கியுடன் (Amana Bank PLC) இணைந்து செயல்படுகிறது. இந்த முயற்சி, ஹஜ் தொடர்பான நடவடிக்கைகளை மேம்பட்ட நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்துடன் வலுப்படுத்துவதற்கு துறையின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
இதன்படி, 2026 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்:
1. சிறப்பு கணக்கு தொடக்கம் – அமானா வங்கியில் “My Hajj Plan” என்ற பெயரில் உங்கள் பெயரில் சிறப்பு கணக்கு ஒன்றைத் தொடங்கி, 2025 செப்டம்பர் 20ஆம் தேதிக்கு முன் 7,50,000 இலங்கை ரூபாவை டெபாசிட் செய்யவும். விபரம் https://www.amanabank.lk/myhajjplan.html
2. பணப் பரிவர்த்தனைகள்: 2026 ஹஜ் பயணத்திற்கான அனைத்து பணப் பரிவர்த்தனைகளும் இந்தக் கணக்கில் உங்கள் பெயரில் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
3. மீதி தொகை செலுத்துதல்: ஹஜ் பயணப் பொதிகளின் விலை இறுதியாகத் தீர்மானிக்கப்பட்டவுடன், மீதமுள்ள தொகையைச் செலுத்துவதற்கான இலக்கு தேதிகளை ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் மத கலாசார விவகாரத் துறை அறிவிக்கும்.
4. நிதி பயன்பாடு : இந்தக் கணக்கில் உள்ள பணம், ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் மத கலாசார விவகாரத் துறையின் அறிவுறுத்தல்களின்படி, ஹஜ் தொடர்பான பணப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
5. லாப பங்கீடு: ஹஜ் தொடர்பான செலவுகளுக்காக பயன்படுத்தப்படும் வரை, இந்தக் கணக்கில் உள்ள நிதிக்கு பொருந்தக்கூடிய லாபம் வழங்கப்படும்.
6. கணக்கு தொடங்குவதற்கு.. அமானா வங்கியின் ஹஜ் மேசையை 0117756755 என்ற எண்ணில் அல்லது myhajj@amana.lk என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும். அருகிலுள்ள அமானா வங்கிக் கிளையை அணுகலாம் அல்லது www.amanabank.lk இணையதளத்தில் உள்ள ஆன்லைன் கணக்கு தொடங்கும் வசதியைப் பயன்படுத்தலாம்.
கூடுதல் நன்மைகள்: இந்த மேம்படுத்தப்பட்ட செயல்பாட்டு மேடையானது, விசா மறுப்பு, கடுமையான நோய் அல்லது மரணம் போன்ற காரணங்களால் ஹஜ் பயணத்தை மேற்கொள்ள முடியாதவர்களுக்கு, ஏற்கனவே ஏற்பட்ட செலவுகளைக் கழித்து, உரிய நேரத்தில் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு வசதி செய்யும்.
உங்கள் ஹஜ் பயணம் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும், உங்கள் தயாரிப்புகள் சீராக அமையவும் வாழ்த்துகிறோம்.
எம்.எஸ்.எம். நவாஸ்
இயக்குநர், முஸ்லிம் மத கலாசார விவகாரத் துறை
எம். ரியாஸ் மிஹுலர்
தலைவர், ஹஜ் மற்றும் உம்ராகுழு
உத்தியோகப்பூர்வ அறிவிப்பு. https://muslimaffairs.gov.lk/hajj-pilgrimage-2026/
@CM