Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு!


அமெரிக்காவில் சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 

எல் சால்வடாரில் இருந்து அமெரிக்கா வந்த ஒரு நோயாளிக்கு நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவோர்ம் (New World screwworm) மயாசிஸ் (myiasis) இருப்பது கண்டறியப்பட்டதாக தெரியவந்துள்ளது.

 

NWS மயாசிஸ் என்பது ஒட்டுண்ணி ஈக்களால் ஏற்படும் ஈ லார்வாக்கள் அல்லது புழுக்களின் ஒட்டுண்ணி தொற்று ஆகும். 

 

NWS ஈ லார்வாக்கள் (புழுக்கள்) ஒரு உயிருள்ள விலங்கின் சதைக்குள் துளையிடும்போது, ​​அவை விலங்குக்கு ஆபத்தான சேதத்தை ஏற்படுத்துகின்றன என்று அமெரிக்க விவசாய திணைக்களம் (United States Department of Agriculture) தெரிவித்துள்ளது. 

 

கால்நடைகள், செல்லப்பிராணிகள், வனவிலங்குகள், எப்போதாவது பறவைகள் மற்றும் அரிதான சந்தர்ப்பங்களில், மக்களைத் பாதிக்ககூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உயிருள்ள திசுக்களை உண்ணும் புழுக்கள் தென் அமெரிக்கா மற்றும் கரீபியனில் காணப்படுகிறன.


வடக்கில் அதன் பரவலைத் தடுக்கும் முயற்சிகள் இருந்தபோதிலும், மெக்ஸிகோ உட்பட ஒவ்வொரு மத்திய அமெரிக்க நாட்டிலும் இந்த புழுக்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

 

குறிப்பாக மனிதர்களில் திறந்த காயம் உள்ளவர்கள், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், ஈக்கள் இருக்கும் பகுதிகளுக்குச் சென்றாலோ அல்லது கிராமப்புறங்களில் கால்நடைகளைச் சுற்றி இருந்தாலோ அதிக ஆபத்து ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

NWS ஈ லார்வாக்கள் (புழுக்கள்) கால்நடைகளில் பாதிப்பை ஏற்படுத்துவதால் கடுமையான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


@CM

Tags

ads