Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூரில் போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது!


கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.


அத்தோடு கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருளையும் கைப்பற்றி உள்ளனர்.


இச்சம்பவம் நேற்று (18) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.


அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, நிந்தவூர் 23 பகுதியைச் சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


இவ்வாறு கைதான சந்தேக நபரிடம் இருந்து 4 கிராமும் 320 மில்லி கிராம் கஞ்சா மற்றும் 6 கிராம் 730 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


அத்துடன், குறித்த கைது நடவடிக்கையானது, அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச்.கலனசிறியின் மேற்பார்வையில், அம்பாறை மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் 1 சம்பத் விக்கிரமரத்னவின் கட்டளையின் பிரகாரம், அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி கே.ஏ.எம்.பிரியங்கரவின் தலைமையிலான குழுவினர் இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


@CM

Tags

ads