விவசாய மற்றும் கைத்தொழில் துறைகளில் இளைய தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கு சலுகைக் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் இதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் பயனாளியொருவருக்கு அதிகபட்சம் 50 இலட்சம் ரூபாய் கடனாக வழங்கப்படும்.
இதற்காக, கடனில் எஞ்சியுள்ள தொகைக்கு 4% ஆண்டு வட்டியாக அறவிடப்படவுள்ளது.
இந்த கடன் திட்டத்தின் மூலம், 50,000 விவசாய தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதனை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது.
இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் இணைந்து விவசாய அமைச்சு இதனை நடைமுறைப்படுத்தவுள்ளது.
இதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
@CM