ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை அக்கறைப்பற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அத்தோடு ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளையும் கைப்பற்றி உள்ளனர்.
இச்சம்பவம் இன்று (20) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அக்கறைப்பற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, நிந்தவூர் குவைத் சிட்டி மற்றும் கடற்கரை வீதியை சேர்ந்த 52 வயது மற்றும் 35 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதான சந்தேக நபரிகளிடம் இருந்து ஹெரோயின் 1 கிராமும் 800 மில்லிகிராம் மற்றும் ஐஸ் 1 கிராம் 900 மில்லிகிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
@CM