2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ளது.
இதன்படி, மின்சார கட்டணத்தை 6.8சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சாரசபை முன்மொழிந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், தொடர்பான வாய்வழி மூல பொது ஆலோசனைகள் பெறும் நடவடிக்கையினை எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னதாக முன்வைக்க முடியுமெனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
@CM