"தி ஹென்லி” வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இலங்கையின் கடவுச்சீட்டு 97வது இடத்திற்கு சரிந்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் 96ஆவது இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த ஆண்டு 97 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
குறித்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர், 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கின்றது.
இந்தப் பட்டியலில் தென் கொரியா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளதுடன் ஜேர்மன், இத்தாலி ,லக்சம்பர்க் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் நான்காவது இடத்திலும் உள்ளன.
மேலும் பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் நான்காவது இடத்தில் உள்ளன.
அத்துடன் குறித்த பட்டியலில் இறுதி இடத்தை ஆப்கானிஸ்தான் பிடித்துள்ளது.
@CM