Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

நாளொன்றுக்கு சிறுநீரக நோயால் உயிரிழப்போர்...!


நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 5 பேர் ஒவ்வொரு நாளும் மரணிப்பதாக தேசிய சிறுநீரக நோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது. 

 

அதாவது ஒவ்வொரு ஆண்டும் மரணிக்கும் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை 1600 ஆக காணப்படுவதாக சமூக மருத்துவ நிபுணர் சிந்தா குணரத்ன தெரிவித்தார். 

 

2023 ஆம் ஆண்டில் மட்டும் 213,000 நாள்பட்ட சிறுநீரக நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

 

"விழிப்புடன் இருப்போம், முன்கூட்டியே அடையாளம் காண்போம், நமது சிறுநீரகங்களைப் பாதுகாப்போம்" என்ற தலைப்பில் நேற்று (17) கொழும்பு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

 

வயது வந்தோரில் சுமார் 10 சதவீதம் பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படலாம் என்றும், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற நாள்பட்ட நோய்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.


@CM

Tags

ads