தென்னிந்திய மாநிலமான கேரளாவில், நீரினால் பரவும் 'மூளையை உண்ணும்' அமீபா குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆண்டு Niegleria fowleriamoeba நோய் தொற்றினால் 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு மடங்கு அதிகமாக குறித்த தொற்றினால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.
இந்த தொற்று காரணமாக இம்மாதத்தில் மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டு அறிக்கையின்படி, இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் மூன்று மாத குழந்தையும் உள்ளடங்கும். நீரினால் பரவும் இந்த தொற்றுகள் மூளையைப் பாதித்து மூளை திசுக்களை அழிக்கக்கூடியது என்பதால் இது 'மூளையை உண்ணும் அமீபா' என்று அழைக்கப்படுகிறது.
அமீபா தொற்று ஏரிகள் மற்றும் ஆறுகளில் காணப்படுகிறன.
இவை மூக்கின் வழியாக மூளையை சென்றடைகிறது.
உலக சுகாதார அமைப்பு (WHO) பாதிக்கப்பட்டவர்களிடையே தலைவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளைப் பட்டியலிட்டுள்ளது, மேலும் இது விரைவாக வலிப்புத்தாக்கங்கள், மனநிலை மாற்றம், மற்றும் கோமா ஆகிய நோய்களுக்குள்ளாக்குகிறது.
இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து பதிவாகியுள்ளன.
@CM