இலங்கை போக்குவரத்து சபையில் அறிமுகப்படுத்தப்படும் சீர்திருத்தங்களின் கீழ், புதிதாக பணியமர்த்தப்படும் பெண் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு விமானப் பணிப்பெண்களைப் போலவே சீருடைகள் வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தலங்கம இலங்கை போக்குவரத்து சபை பேருந்து நிலையத்தில் 25 டிப்போக்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இளைய தலைமுறையினர் இலங்கை போக்குவரத்து சபையை ஒரு கவர்ச்சிகரமான பணியிடமாகப் பார்க்கும் வகையில், குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
@CM