இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழர்கள் இந்தியாவுக்கு விசா இல்லாமல் செல்வதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
விரைவில் இந்த வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக செந்தில் தொண்டமான் கூறினார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறினார்.
குறித்த திட்டங்கள் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரும் கவனம் செலுத்தியுள்ளதாக செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
@CM