Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

பெண்களே அவதானம் - மார்பகப் புற்றுநோய் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!


இலங்கையில் தினமும் சுமார் 15 புதிய மார்பகப் புற்றுநோய் சம்பவங்கள் பதிவாகின்றன. அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் மூன்று பெண்கள் இந்த நோயால் உயிரிழப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் இயக்குநர் ஸ்ரீனி அழகப்பெரும இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். 

 

பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் 19,457 பெண் புற்றுநோய் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

இவற்றில், 5,477 பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாவர். 

 

மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது வெற்றிகரமான சிகிச்சைக்கு வழிவகுக்கும் என்றபோதிலும், சுமார் 30வீதமான நோய்கள் தாமதமாகவே கண்டறியப்படுகின்றன. 

 

இதனால் சிகிச்சை மிகவும் கடினமாகிறது என்று மருத்துவர் ஸ்ரீனி அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார். 

 

இதேவேளை, இலங்கையில் ஆண்டுதோறும் 15,245 புற்றுநோய் தொடர்பான இறப்புகள் ஏற்படுகின்றன. 

 

அவற்றில் 798 இறப்புகள் மார்பகப் புற்றுநோயால் ஏற்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


@CM

Tags

ads