Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

அடுத்த ஆண்டு முதல் உரிய காலப்பகுதியில் பரீட்சைகள்!


அடுத்த வருடம் முதல் சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளை உரிய காலப்பகுதியில் நடத்துவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.


அதன்படி, 2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த (உ/த) பரீட்சையை ஓகஸ்ட் மாத்திலும் , 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.


அத்துடன் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சையை அடுத்த ஆண்டு பெப்ரவரியில் நடத்துவதற்கும் கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது.


இதற்கமைய பாடசாலை விடுமுறை, உரிய காலப்பகுதியில் வழங்கப்பட வேண்டும் என கல்வியமைச்சு வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ பாடசாலை கல்வித் தவணை அடங்கிய நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


@CM

ads