Type Here to Get Search Results !
Developed by Cleverbit

எச்சரிக்கை மட்டத்தை எட்டிய வெப்பநிலை!


வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில பகுதிகளிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பக் குறியீடு எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 

எனவே அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

 

வெளியிடங்களில் பணியில் ஈடுபடுபவர்கள் தேவையான அளவு நீர் பருகவும், நிழல் உள்ள இடங்களில் இருக்கவும் அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

 

அத்தோடு, முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள் இந்நாட்களில் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

@CM

Tags

ads