பூமியிலிருந்து சந்திரன் மெதுவாக நகர்ந்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து ஆய்வினை மேற்கொண்டுவரும் அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் புவியியலாளர் மற்றும் வானியலாளர் ஸ்டீபன் டிக்கர்பி இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
சந்திரன் ஒவ்வொரு ஆண்டும் 3.8 CM (1.5 அங்குலம்) என்ற விகிதத்தில் பூமியிலிருந்து விலகிச் செல்கிறது என்று அவர் கூறுகிறார்.
சந்திரன் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளாகப் பூமியின் துணைக்கோளாக இருக்கிறது என நம்பப்படுகிறது.
இதன் விளைவாக, பூமியின் சுழற்சியும் படிப்படியாகக் குறைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி ‘ஒரு நாள்’ என்பது இன்னும் நீளமாகக்கூடும் என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.
இதேவேளை சுமார் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது டைனோசர்களின் காலத்தில், பூமியில் ஒரு நாள் என்பது 23.5 மணித்தியாலங்களாக இருந்ததாகவும் அவர் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
@CM