குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு ரூ.3 இலட்சம் பரிசுத்தொகை வழங்குவதாக தாய்வான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
தாய்வானில் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்து வருவதால், குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி ஒரு குழந்தையினை பெற்று கொள்பவர்களுக்கு ரூ.3 இலட்சமும், இரட்டை குழந்தைகளுக்கு ரூ.6 இலட்சமும் வழங்கப்படுகிறது.
அங்கு ஒரு குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ.1 இலட்சமும், இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டால் ரூ.2 இலட்சமும் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த பரிசுத்தொகை ஒரு குழந்தைக்கு ரூ.3 இலட்சமாகவும், இரட்டை குழந்தைகளுக்கு ரூ.6 இலட்சமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
@CM