Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

நிந்தவூரை சேர்ந்த இலங்கை நிருவாக சேவை அதிகாரி சட்டத்தரணி M.B. Mohamed Sufyan (SLAS) அவர்கள் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்!


நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றிருக்கும்   நிந்தவூரை சேர்ந்த இலங்கை நிருவாக சேவை அதிகாரி சட்டத்தரணி  M.B. Mohamed Sufyan (SLAS)அவர்கள் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சமூகவியல் விசேட துறையில் தனது பட்டப் படிப்பை முடித்துள்ளதுடன்  இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமானி பட்டத்தினை  பூர்த்தி செய்துள்ளார்.


 நீதி அமைச்சின் சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தின் சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தராக மூன்று வருடங்கள் கடமையாற்றி இலங்கை நிருவாக சேவை பரீட்சையில் சித்தியடைந்து  இலங்கை அபிவிருத்தி நிருவாக  நிறுவனத்தில்  பயிற்சியின் பின்னர்  தேர்தல் ஆணைக்குழுவின் உதவித் தேர்வு ஆணையாளராக நியமிக்கப்பட்டு அனுராதபுர மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளராக மூன்று வருடங்கள் கடமையாற்றி பின்னர் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளராக நான்கு வருடங்களுக்கு  மேல் கடமையாற்றி பல தேர்தல்களை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் நடத்தி முடித்திருந்தார். இக்கடமைக் காலத்தில் இவரது  சேவை மற்றும் நிருவாக திறமை  காரணமாக பலரது நன்மதிப்பினையும் பாராட்டினையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் 10.09.2025ம் திகதி முதல் செயற்படுமாறு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மாகாண ஆணையாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.


 இவர் சட்டத்துறைக்குள்ளும் தனது கால் தடத்தை பதித்து ஒரு சட்டதரணியாகவும் திகழ்வதுடன்  தற்போது  கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொது நிருவாக துறையில் முது கலைமாணி பட்டத்தையும் தொடர்கிறார்.


அல்லாஹ்வின் உதவியோடும் அவருடைய முயற்சியோடும் அவர் இன்னும் பல வெற்றிப்படிகளை  எட்ட சிட்டிசன் மீடியா சார்பாக  பிரார்த்திக்கின்றோம்.


@CM

Tags

ads