ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி Google அறிவித்த C2S-Scale 27B என்ற புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரி ,திசுக்களின் நடத்தை ஆய்வில் மிக முன்னேறிய ஒன்றாக கருதப்படுகிறது. இந்த மாதிரி, Google-இன் Gemma மாதிரி குடும்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும்.
இதன் மூலம் புற்றுநோய் திசுக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்புக்கிடையிலான தொடர்பை விளக்கும் புதிய விஞ்ஞானக் கருதுகோளை (hypothesis) உருவாக்கியுள்ளது .
இது எதிர்கால புற்றுநோய் சிகிச்சை முறைகளை முற்றிலும் மாற்றக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த AI மாதிரி, தனித்தனி திசுக்களின் மொழியை புரிந்து கொள்ளும் திறன் பெற்றுள்ளது.
இதன் மூலம், உடல் நோய் எதிர்ப்பு அமைப்பால் அடையாளம் காணப்படாத குளிர் கட்டிகளை (cold tumors) குணப்படுத்தக்கூடிய மாற்றும் வழிமுறையைக் கண்டறிந்துள்ளது.
இது புற்றுநோய் சிகிச்சை துறையில் மிகவும் கடினமான சவால்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
AI கண்டறிந்த புதிய இயக்கவியல் (mechanism) இந்த குளிர் கட்டிகளை நோய் எதிர்ப்பு அமைப்புக்கு தெரிவிப்பதற்கான வழியைத் திறக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்த புதிய அமைப்பு தொடர்பில்,
Google நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தனது “X” பதிவில், “முன்கூட்டிய பரிசோதனைகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் மூலம், இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோயை எதிர்கொள்ள புதிய சிகிச்சை வழியை வெளிப்படுத்தக்கூடும்”என்று தெரிவித்துள்ளார்.
இந்த கண்டுபிடிப்பு, AI உயிரியல் ஆய்வுகளில் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கியதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
@CM
