Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

அஸ்வெசும இரண்டாம் கட்டம் : வங்கிக் கணக்கு திறக்காத பயனாளிகளுக்கு அறிவிப்பு!


அஸ்வெசும நலன்புரி நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற்றும், இதுவரையில் வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்காத பயனாளிகள் தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 

 

குறித்த பயனாளிகளின் பெயர் பட்டியல் பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

 

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்குத் தெரிவாகி, இதுவரை வங்கிக் கணக்கு ஆரம்பிக்காத பயனாளிகள், தமது பிரதேச செயலகத்திற்குச் செல்ல வேண்டும். 

 

வங்கிக் கணக்கு ஆரம்பிப்பதற்கான அனுமதி கடிதத்தை பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும். 

 

அக்கடிதத்தை, பயனாளிகளுக்கு இலகுவான ஒரு வங்கிக் கிளையில் சமர்ப்பித்து, அஸ்வெசும நலன்புரி வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டும். 

 

மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வங்கியில் வங்கிக் கணக்கை ஆரம்பிக்க முடியும். 

 

இவ்வாறு வங்கிக் கணக்கைத் திறந்த பின்னர், குறித்த வங்கிக் கணக்கு விபரங்களை உடனடியாக பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

எனவே, அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற்று இதுவரையில் வங்கிக் கணக்கு ஆரம்பிக்காத பயனாளிகள், முடிந்தவரை விரைவில் இந்த வங்கிக் கணக்குகளைத் திறந்து, உரிய விபரங்களைப் பிரதேச செயலகத்தில் வழங்குமாறு நலன்புரி நன்மைகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது.


@CM

Tags

ads