Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

நிந்தவூரை சேர்ந்த Fathima Suaadha, மாலபே SLIIT பல்கலைக்கழகத்தில் (Sri Lanka Institute of Information Technology) Quantity Surveying துறையில் தனது படிப்பை சிறப்பாக முடித்து, இங்கிலாந்தின் Liverpool John Moores University வழங்கிய Bachelor of Science (Honours) Degree – First Class பட்டத்தை பெற்று சாதனை!


Quantity Surveying துறையில் சாதித்த நிந்தவூர் மாணவி!  


நிந்தவூர், 16ம் பிரிவு, முதலாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த Fathima Suaadha அவர்கள், மாலபே SLIIT பல்கலைக்கழகத்தில் (Sri Lanka Institute of Information Technology) Quantity Surveying துறையில் தனது படிப்பை சிறப்பாக முடித்து, இங்கிலாந்தின் Liverpool John Moores University வழங்கிய Bachelor of Science (Honours) Degree – First Class பட்டத்தை பெற்றுள்ளார்.


இத்துடன், தனது கல்விச் சாதனைகளுக்காக அவர் Best Performance Award விருதையும் பெற்றுள்ளார். இது அவரது கல்வித்திறன், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பிற்கான ஒரு சிறப்பான அங்கீகாரமாகும்.


Suaadha அவர்கள் தனது கல்வி பயணத்தை நிந்தவூரிலுள்ள அல்-மஸ்ஹர் மற்றும் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலைகளில் தொடங்கி, பின்னர் SLIIT பல்கலைக்கழகத்தில் தனது கனவுகளை நனவாக்கினார்.


📌 கல்விக்காலத்திலேயே அவர் Freelancer Cost Estimator ஆக செயல்பட்டு, 12க்கும் மேற்பட்ட முக்கியமான Project-களில் பணியாற்றினார். இதன் மூலம் மதிப்புமிக்க தொழில்முறை அனுபவம் பெற்றதோடு, தனது முதல் முயற்சியிலேயே புகழ்பெற்ற Arabian Technical Petroleum Services (ATPS), Qatar நிறுவனத்தில் வேலைவாய்ப்பையும் பெற்றுள்ளார்.


✨ தற்போது அவர் தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயமாக Qatar நோக்கி புறப்பட்டுச் செல்கிறார். இது நிந்தவூர் மாணவியருக்கு பெருமையும், இளம் தலைமுறைக்கு ஊக்கமும் தரும் சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது.


👉 இவர் நிந்தவூரைச் சேர்ந்த ஐமால்தீன் சல்சபீல் – பாதிமா ஷாகிறா தம்பதிகளின் மூத்த புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.


அவர் எதிர்காலத்தில் மேலும் உயர்ந்து, சமூகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.


@CM

Tags

ads