1997 முதல் 2012 வரை பிறந்தவர்களைச் சேர்ந்த Gen Z தலைமுறை, தற்போது கடுமையான பண அழுத்தத்தில் வாழ்வதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகின்றது.
பணவீக்கம், வீட்டு வாடகை உயர்வு, மாணவர் கடன் சுமை, வேலைவாய்ப்பு நிலைத்தன்மை பற்றிய அச்சம் போன்ற காரணங்களால், இவர்கள் பெரும் பொருளாதார சிக்கலை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சூழ்நிலையால், அவர்களின் காதல் உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக Intuit என்ற நிதி தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட “The Cuffing Economy” என்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் படி, Gen Z இளைஞர்களில் மூவரில் ஒருவராவது இலவச உணவுக்காக நண்பர்களை சந்திக்க செல்வதாக கூறப்படுகின்றது. இதை “Foodie Calls” என நகைச்சுவையாக குறிப்பிடுகின்றனர்.
அதேபோல், Gen Z இல் 58% பேர் பண அழுத்தம் காரணமாக காதல் தொடர்புகளை முற்றிலுமாக தவிர்த்துள்ளனர் எனவும் ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகின்றது.
மில்லேனியல் தலைமுறையினர் அதாவது 1980 –1990களில் பிறந்தவர்கள் மத்தியில் இது 51% காணப்படுவதாக கூறப்படுகின்றது.
மேலும், Gen Z இளைஞர்களில் ஐந்து பேரில் ஒருவராவது, பணத்தைச் சேமிக்க காதலை முற்றிலுமாகத் தவிர்த்ததாக ஆய்வுகள் கூறுகின்றன.
சமூக வலைதளங்களில், குறிப்பாக TikTok செயலிகளில் இதுகுறித்த நகைச்சுவை வீடியோக்களும் பரவி வருகின்றன.
உதாரணமாக, பிரித்தானிய பாடகி Chiara King ,
“ஒருவர் நல்லவர் இல்லையென்றாலும், இலவச இரவு உணவு கிடைக்கும் என்பதற்காக டேட்டுக்கு செல்வேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், ஒரு மாணவி பல்கலைக்கழகத்துக்கு செலுத்த பணம் இல்லாததால் 16 இரவு விருந்துகளில் பங்கேற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மனநல ஆலோசகர் மற்றும் நிதி நிபுணர் அஜா எவன்ஸ்,
“இலவச உணவுக்காக டேட்டுக்கு செல்லும் பலர் ஏற்கனவே பண சிக்கலில் உள்ளவர்கள். அவர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்காகவும், உணர்ச்சிசார் வெளிப்பாடாகவும் இருக்கிறது.” என தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில், Gen Z தலைமுறை தங்களது வருமானம், செலவு மற்றும் கடன் குறித்து முந்தைய தலைமுறையைவிட திறந்த மனதுடன் பேசத் தயாராக இருந்தாலும், அதுவே சிலருக்கு உணர்ச்சி ரீதியான சிக்கல்களை உருவாக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
@CM
