நாட்டை அண்மித்து காணப்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாட்டைவிட்டு விலகிச் செல்வதால், நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாகக் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலமொன்று உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய குறித்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மேலும் வலுவடைந்து, இலங்கையின் வடக்குக் கடற்பிராந்தியத்தை அண்மித்து பயணிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பொதுமக்கள் அவதானமாகச் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
@CM
