இன்றைய வானிலை முன்னெச்சரிக்கை!
வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (31) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழைபெய்யும் வேளைகளில் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
@CM
