நிந்தவூரைச் சேர்ந்த எம்.ஐ.எம். அசான் கிழக்கு மாகாண Colours Award பெற்றார்!
கிழக்கு மாகாண விளையாட்டு துறை அமைச்சினால் நடத்தப்பட்ட Colours Award 2024/25 ஆம் ஆண்டுக்கான விருதினை நிந்தவூரைச் சேர்ந்த எம்.ஐ.எம். அசான் பெற்றுக் கொண்டார்.
தேசிய மட்டத்தில் Long Jump போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றதுடன், மாகாண மட்டத்தில் புதிய Meet Record ஒன்றையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட்டு துறையில் வெளிப்படுத்திய சிறப்பான திறமை, தொடர்ச்சியான பயிற்சி மற்றும் கடின உழைப்பின் அடிப்படையிலேயே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
எம்.ஐ.எம். அசான் அவர்களுக்கு சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
@CM
