Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

ஈரான் மீது அமெரிக்கா விதித்த 25% வரி - இலங்கையின் எரிபொருள் விலை உயருமா?


இலங்கை தற்போது ஈரானிலிருந்து எரிபொருளை கொள்வனவு செய்யவில்லை. எனவே, ஈரானுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்டுள்ள 25% வரி விதிப்பு, இலங்கையை நேரடியாகப் பாதிக்காது என்று எரிசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார். 

 

அத்துடன், முறையான விலைமனுக்கோரல் நடைமுறைகளின் கீழ் தற்போது இந்தியா, சிங்கப்பூர் மற்றும் சீனாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிடமிருந்து இலங்கை எரிபொருள் கொள்வனவு செய்து வருவதாகவும், ஈரானுடன் தனியாக எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

 

இலங்கை தமது மொத்த எரிபொருள் தேவையின் 90வீதத்துக்கு மேற்பட்டதை இறக்குமதி செய்து வருகின்றது. 

 

அத்துடன், ஆண்டுதோறும் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகை, சுமார் 4 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலராக மதிப்பிடப்பட்டுள்ளது.


@CM

Tags

ads