Type Here to Get Search Results !
Developed by Cleverbit

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!



 இன்று (1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலையை அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


இந்த விலை அதிகரிப்புக்கமைய, அதன் புதிய விலை 4,250 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை, சந்தையில் 4,100 ரூபாவாக காணப்பட்டது.


அவ்வாறே, 5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயுவின் 65 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,710 ரூபாவாகும்.


@CM

Tags

ads