நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பல மாகாணங்களில் பனிமூட்டம் மற்றும் பலத்த காற்று குறித்த முன்னறிவிப்புகளை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று அதிகாலை மற்றும் காலை வேளைகளில் கடும் பனிமூட்டமான காலநிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வீதிகளில் போதிய தெளிவுத்தன்மை குறைவாக இருக்கும் என்பதால் வாகன சாரதிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மத்திய மலைநாட்டின் கிழக்குச் சரிவுப் பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
அதன்படி வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்று வீசும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
காலை வேளையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக விபத்துகளைத் தவிர்க்க முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரவிட்டபடி குறைந்த வேகத்தில் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
@CM
