Type Here to Get Search Results !
Developed by Cleverbit

சிடிசன் மீடியாவின் ஊடகவியலாளரும் ஆலோசகருமான ஏ.எல். றபீக் பிர்தெளஸ் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்!


நிந்தவூரைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும், கமு/அல்- பதுறியா வித்தியாலயத்தின் பிரதி அதிபருமான ஏ.எல். றபீக் பிர்தெளஸ் அவர்கள், தனது 36 வருட அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.


கல்வித் துறையிலும், ஊடகத் துறையிலும் அவர் வழங்கிய நெடுந்தொடரான சேவைகள் சமூகத்திற்கு முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளன.


அவர் முன்பள்ளி பாடசாலைகளை நிர்வகித்து ஆரம்பக் கல்வியை வழங்கும் கல்விச் சேவையை மேற்கொண்டு வருவதுடன், கடந்த காலங்களில் அரசியல் செயற்பாடுகளிலும் முன்நின்று செயல்பட்டு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


அவரது எதிர்காலப் பயணம் மேலும் சிறப்பும் வெற்றியும் நிறைந்ததாக அமைய சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.


@CM

Tags

ads