15வது ஷோட்டோகன் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் 2025 (15th Shotokan National Karate Championships 2025) கொழும்பு நகரிலுள்ள St Joseph’s Indoor Stadium அரங்கில் இன்று (14) நடைபெற்றது.
IM.சதாத் அவர்களின் மகன் சதாத் முகம்மது இஹ்சான், நிந்தவூர் TeamBruce அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, மாஸ்டர் நிம்ஸி அவர்களின் வழிகாட்டுதலில் தேசிய மட்டத்தில் நடைபெற்ற போட்டியில் 25+ கிலோ எடை பிரிவில் ஒன்பது போட்டியாளர்களுடன் போட்டியிட்டு (ரன்னர்-அப்) 2ஆம் இடத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இவர் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சர்வதேச ஷோட்டோகன் கராத்தே சாம்பியன்ஷிப்பில் தேர்வு செய்யப்பட தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் பெருமைக்குரிய வெற்றி ஆகும். தேசிய மட்டத்தில் இந்த பதக்கத்தை வென்றது நிந்தவூருக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது.
இவருக்கு சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
