Type Here to Get Search Results !
Developed by Cleverbit

ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவித் தொகை அதிகரிப்பு: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் முக்கிய தீர்மானம்!


ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக வழங்கப்படும் மருத்துவ உதவித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி நிதியத்தின் ஆளுநர் சபைக் கூடிய போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, தற்போது வழங்கப்படும் மருத்துவ உதவிக் கட்டணங்களைத் திருத்தம் செய்து அந்த உதவித் தொகையை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


மருத்துவ உதவிகளைப் பெறுவதில் உள்ள கடுமையான நிபந்தனைகளைத் தளர்த்தப்பட்டுள்ளன.


அதன்படி, பல்கலைக்கழகக் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு, ஒரு இலட்சம் ரூபாய் உதவித் தொகையை ஒரே தடவையில் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அரச மருத்துவமனைகளில் இதய சத்திர சிகிச்சை மற்றும் கண்புரை சத்திர சிகிச்சைகளுக்காகக் காணப்படும் நீண்ட வரிசைகளைக் குறைப்பதற்குக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


அத்துடன், ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக உதவி பெறுபவர்களின் விபரங்களை மாவட்ட மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகள் மட்டத்தில் இணையத்தளத்தில் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


@CM

Tags

ads