இலங்கை மின்சார சபையின் (CEB) அனைத்து ஊழியர்களுக்கும் 25 சதவீதம் வேதன உயர்வை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்சார சபையில் நீண்டகாலமாக நிலவி வந்த வேதன முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கும், ஊழியர்களின் பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேதன உயர்வு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முன்தேதியிடப்பட்டு (Retroactively) வழங்கப்படவுள்ளது.
மின்சார சபையானது மின் உற்பத்தி, கடத்துகை, விநியோகம் மற்றும் கட்டமைப்புச் செயல்பாடுகளுக்காகப் புதிதாக நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களாக (Successor Companies) மாற்றப்பட்டு வருகின்றது.
இந்த மாற்றத்தின் போது ஊழியர்களின் ஒத்துழைப்பை உறுதிப்படுத்தவும், பணியாளர்களின் மன உறுதியைப் பேணவும் இந்த வேதன உயர்வு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
@CM
