மெட்டா (Meta) நிறுவனம் தனது வட்ஸ்அப் (WhatsApp) செயலியில் பயனர்களின் தனியுரிமையை (Privacy) மேலும் பலப்படுத்தும் நோக்கில் ஒரு பாரிய மாற்றத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, இனி வரும் ஜூன் மாதத்திற்குள்ளாக தொலைபேசி எண்ணைக் காண்பிக்காமலேயே, பிரத்யேகமான 'பயனர்பெயர்' (Username) மூலம் மற்றவர்களுடன் உரையாடல்களை மேற்கொள்ளும் வசதி அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது வரை வட்ஸ்அப் பயன்படுத்துவதற்குத் தொலைபேசி எண் கட்டாயமாக உள்ள நிலையில், இந்த புதிய மாற்றத்தின் மூலம் தெரியாத நபர்களிடம் நமது தொலைபேசி எண்ணைப் பகிர வேண்டிய அவசியம் இருக்காது.
டெலிகிராம் போன்ற செயலிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இந்த வசதி, வட்ஸ்அப்பில் வருவது பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் தேவையில்லாத 'ஸ்பேம்' (Spam) செய்திகள் குறையும் என்றும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட விபரங்களின் பாதுகாப்பு கணிசமாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
@CM
