Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் தவிசாளர் றியாஸ் ஆதம் அவர்களுக்கு சிட்டிசன் ஊடக வலையமைப்பினரால் சிறப்பு கௌரவம்

 


நிந்தவூர் தவிசாளர் றியாஸ் ஆதம் அவர்களுக்கு சிட்டிசன் ஊடக வலையமைப்பினரால் சிறப்பு கௌரவம்


நிந்தவூர்:

சிட்டிசன் வலையமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான றியாஸ் ஆதம்(LLB) அவர்களை இந் நிகழ்வில் கௌரவித்ததுடன் 

சமூக சேவையில் அவர் வெளிப்படுத்திய நீண்டகால அர்ப்பணிப்பும், சிட்டிசன் ஊடக வலையமைப்பின் வளர்ச்சிக்காக வழங்கிய உறுதியான ஆதரவும் உயர்ந்த பாராட்டைப் பெற்றன.


 அதன் அடையாளமாக, விழா மேடையில் அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இக் கௌரவிப்பு, சமூக முன்னேற்றப் பயணத்தில் முன்னிலை வகிக்கும் தலைமைத்துவத்தைப் பாராட்டும் ஒரு சின்னமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags

ads