Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இலங்கையின் 21 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!


இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக, நாளை (ஏப்ரல் 21) மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டெண் 'அவதானம்' செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சபரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்டவற்றுடன் மொனராகலை மாவட்டத்திலுள்ள உள்ள சில இடங்களில் வெப்பம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வெப்பச் சுட்டெண் 'அவதானம்' மட்டத்தில் இருக்கும் போது நீண்ட நேரம் வெயிலில் இருப்பதன் மூலம் உடல் சோர்வு ஏற்படலாம், தொடர்ந்து கடினமான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படும் தசைப்பிடிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாகம் ஏற்படாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், முடிந்தவரை வெளியில் செல்வதைத் தவிர்த்து, நிழலான இடங்களில் தங்கவும், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து விசேட அவதானம் செலுத்தவும், மென்மையான, வெளிர் நிற ஆடைகளை அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


@CM

Tags

ads