Type Here to Get Search Results !
Developed by Cleverbit

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கண்டறியப்பட்ட புதிய சிகிச்சை வாய்ப்புகள்!


மூளையைப் பாதிக்கும் 'லீக் சிண்ட்ரோம்' என்ற அரிய வகை நோய்க்குத் தீர்வுகாண செயற்கை நுண்ணறிவு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் ஊடாக உதவும் வழிமுறை ஆய்வுகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.


லீக் சிண்ட்ரோம் என்பது ஒரு மரபணு ரீதியான பாதிப்பாகும் (Mitochondrial disease).இது பெரும்பாலும் குழந்தைப் பருவத்தி் ஆரம்பித்து , உடல் இயக்கக் குறைபாடு, அறிவுத்திறன் பாதிப்பு மற்றும் ஆரம்பகால மரணத்திற்கு வழிவகுக்கிறது.உலகளவில் 36,000 பேரில் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.


தற்போது இந்த நோய்க்குப் போதிய மருந்துகள் இல்லாத நிலையில், சர்வதேச ஆய்வுக் குழுவினர் மூன்று விதமான அணுகுமுறைகளை (in vitro, in vivo & in silico) ஒருங்கிணைத்து புதிய மருந்துகளைக் கண்டறிந்துள்ளனர்.


ஆயிரக்கணக்கான மருந்துகளை ஆய்வகத்தில் ஒவ்வொன்றாகச் சோதிப்பதற்குப் பதிலாக, AI மூலம் மிகக் குறுகிய காலத்தில் சாத்தியமான மருந்துகளை மட்டும் வகைப்படுத்தினர்.ஏற்கனவே மற்ற நோய்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட 5,500-க்கும் மேற்பட்ட மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன.


பொதுவாக ஆண்குறி விறைப்புத்தன்மை மற்றும் நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்திற்குப் பயன்படுத்தப்படும் இந்த மருந்து, லீக் சிண்ட்ரோம் பாதிப்புக்குச் சிறந்த பலனைத் தருவது கண்டறியப்பட்டது.


ஆறு நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட முதற்கட்ட சோதனையில், அவர்களின் உடல் இயக்கத்தில் முன்னேற்றம் தெரிந்தது.


முகப்பரு மற்றும் சொரியாசிஸ் நோய்க்காக உருவாக்கப்பட்ட இந்த மருந்து, AI மூலம் மற்றொரு நம்பிக்கையூட்டும் மருந்தாக அடையாளம் காணப்பட்டுள்ளது.


புதிய மருந்துகளை உருவாக்குவதற்குப் பதிலாக, பாதுகாப்பானது என ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட மருந்துகளை மறுபயன்பாடு செய்வதன் மூலம் சிகிச்சையை விரைவுபடுத்த முடியும்.நோயாளிகளின் தோல் செல்களிலிருந்து உருவாக்கப்பட்ட 'மூளை ஆர்கனாய்டுகள்' (Brain organoids - 3D செல்கள்) மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.


அரிய வகை நோய்களுக்கான மருந்து கண்டுபிடிப்புத் துறையில் இந்த ஆய்வுக் குழாய் (Methodological pipeline) ஒரு மைல்கல்லாகும். இது மற்ற நரம்பியல் கோளாறுகளுக்கும் தீர்வுகாண ஒரு முன்மாதிரியாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


@CM

Tags

ads