Type Here to Get Search Results !
Developed by Cleverbit

தோனியின் 5 வருட சாதனை தகர்ப்பு! சேப்பாக்கத்தில் சஞ்சு சாம்சனின் ருத்ரதாண்டவம்


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கெபிடல்ஸ் அணியை வீழ்த்திய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, இந்த பருவகாலத்தில் தனது சொந்த மண்ணில் முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது.


அத்துடன், இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன், சென்னை அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனியின் நீண்டகால சாதனை ஒன்றையும் முறியடித்துள்ளார்.


நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.


இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 212 ஓட்டங்களைக் குவித்தது.


ஆரம்பம் முதல் அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன், ஆட்டமிழக்காமல் 115 ஓட்டங்களைப் பெற்றார்.


இதனைத் தொடர்ந்து 213 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 189 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.


இந்தப் போட்டியின் ஊடாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் காப்பாளர் ஒருவரால் ஒரு ஐபிஎல் போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் தன்வசப்படுத்தியுள்ளார்.


இதற்கு முன்னர், 2019 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் எம்.எஸ்.தோனி பெற்ற 84 ஓட்டங்களே சாதனையாக இருந்தது.


தற்போது டெல்லி அணிக்கு எதிராக 115 ஓட்டங்களை விளாசியதன் மூலம், 5 வருடங்களுக்குப் பின்னர் தோனியின் அந்தச் சாதனையை சஞ்சு சாம்சன் தகர்த்துள்ளார்.


சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் சஞ்சு சாம்சன் நிகழ்த்திய இந்த அதிரடி மற்றும் சென்னை அணியின் வெற்றி என்பன ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.


@CM

ads