Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இலங்கை போக்குவரத்து சபையில் டிஜிட்டல் புரட்சி - அறிமுகமாகும் புதிய மாற்றம்!


பொதுப் போக்குவரத்து சேவையை நவீனமயப்படுத்தும் நோக்கில், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்துகளில் பயணக் கட்டணங்களைச் செலுத்துவதற்காக பிரத்தியேக அட்டை (Card-only payment system) முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.


இலங்கை போக்குவரத்துச் சபையின் சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் இலக்கின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் சில மாதங்களுக்குள் இப்புதிய முறைமையை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக தலைவர் குறிப்பிட்டுள்ளார்.


பொதுப் போக்குவரத்துத் துறையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் பாரிய தொழில்நுட்ப மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.


இதன் மூலம் பயணிகள் பணத்தை நேரடியாகக் கையாள்வதைத் தவிர்த்து, இலகுவான மற்றும் பாதுகாப்பான முறையில் கட்டணங்களைச் செலுத்த வழிவகை செய்யப்படும்.


@CM

Tags

ads