Type Here to Get Search Results !
Developed by Cleverbit

சர்வதேச மசகு எண்ணெய் விலையில் மாற்றம்;இலங்கையில் எரிபொருள் விலை குறையுமா?


அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போருக்கு மத்தியில், போர்நிறுத்தக் காலம் முடியும் வரை ஹோர்முஸ் நீரிணையை வணிகக் கப்பல்களுக்காகத் திறந்து விடப்போவதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலகப் பொருளாதாரம் சற்று நிம்மதி அடைந்துள்ளது.


வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு பீப்பாய் ப்ரெண்ட் மசகு எண்ணெய் 98 டொலராக இருந்த நிலையில், ஈரானின் அறிவிப்பிற்குப் பிறகு அது 88 டொலராகக் குறைந்தது. பின்னர் மீண்டும் 92 டொலர் வரை உயர்ந்தது.


போர் தொடங்குவதற்கு முன்னதாக 70 டொலராக இருந்த எண்ணெய் விலை, மார்ச் மாதத்தில் உச்சகட்டமாக 119 டொலர் வரை அதிகரித்திருந்தது.


ஈரானின் இந்த நகர்வை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றுள்ளார். இதனால் சர்வதேச பங்குச் சந்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


இதனால் அமெரிக்காவின் S&P 500 குறியீடு 1.2 வீதம் உயர்ந்துள்ளது.


லண்டனின் S&P 100, பாரிஸின் Cac மற்றும் பிராங்பேர்ட்டின் Dax ஆகிய சந்தைகளும் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளன.


ஈரான் வழிப்பாதையைத் திறந்துவிட்டாலும், சர்வதேச கப்பல் போக்குவரத்து அமைப்பான டீஐஆஊழு மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்பு ஆகியவை இன்னும் எச்சரிக்கையுடனேயே உள்ளன.


நீரிணைப் பகுதியில் கடல் கண்ணிவெடிகளின் நிலை குறித்துத் தெளிவற்ற சூழல் நிலவுவதால், கப்பல்களைச் செலுத்த இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.


போர்நிறுத்தம் முடிவடைய இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இது சிக்கியுள்ள கப்பல்கள் வெளியேற மட்டுமே உதவும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.


ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருந்ததால் எரிபொருள் விலை உயர்ந்தது மட்டுமன்றி, விவசாயத்திற்குத் தேவையான உர விநியோகமும் (உலகத் தேவையில் மூன்றில் ஒரு பங்கு) பாதிக்கப்பட்டது.


இதனால் உலகளவில் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் நிலவுகிறது. தற்போது நீரிணை திறக்கப்படுவதால் விநியோகச் சங்கிலியில் உள்ள தடைகள் மெதுவாகச் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


@CM

Tags

ads