Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மே மாதம் வானில் இடம்பெறவுள்ள அதிசயம்!


 வருடாந்தம் விண்வெளியில் நிகழும் அற்புதமான நிகழ்வுகளில் ஒன்றான ‘ஏட்டா அக்வாரிட்ஸ்’ (Eta Aquarids) விண்கல் மழை, எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உச்சமடையும் என நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி கிளார்க் நிறுவனத்தின் வானியல் பிரிவு அறிவித்துள்ளது.


பிரபலமான ‘ஹேலியின் வால்மீன்’ (Halley's Comet) விட்டுச் சென்ற சிதைந்த விண்வெளித் துகள்கள் ஊடாக பூமி பயணிக்கும் போது இந்த விண்கல் மழை உருவாகிறது.


ஏப்ரல் 18 முதல் மே 27 வரை இக்காலம் நீடித்தாலும், மே 06 ஆம் திகதியே விண்கற்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படும்.


மே 6 ஆம் திகதி அதிகாலை 2:00 மணிக்குப் பின்னர் விண்கற்களைத் தெளிவாக அவதானிக்க முடியும்.


கிழக்கு அடிவானத்தை நோக்கிப் பார்ப்பதன் மூலம் இந்த நிகழ்வைக் காணலாம்.


வானம் தெளிவாகவும் இருட்டாகவும் இருக்கும் பட்சத்தில், ஒரு மணித்தியாலத்திற்கு 40 முதல் 85 விண்கற்கள் வரை தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கும்ப ராசி (Aquarius) மண்டலத்திலிருந்து இந்த விண்கற்கள் தெரிப்பது போன்ற தோற்றம் ஏற்படுவதால் இது ‘ஏட்டா அக்வாரிட்ஸ்’ என அழைக்கப்படுகிறது.


செயற்கை ஒளி மாசுகள் (Light Pollution) இல்லாத, கட்டிடங்கள் மறைக்காத திறந்தவெளிப் பகுதிகளில் இந்த விண்கல் மழையை மிகத் தெளிவாகக் கண்டு இரசிக்கலாம் என ஆர்தர் சி கிளார்க் நிறுவனத்தின் வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


@CM

Tags

ads