Type Here to Get Search Results !
Developed by Cleverbit

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!


அரச வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், பிரிவெனாக்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ஏற்பாடு செய்யப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் தொடர்பான சுற்றுநிரூபத்தை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.


அரச வெசாக் பௌர்ணமி பண்டிகையுடன் இணைந்ததாக மே 26 முதல் ஜூன் 02 வரை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த காலப்பகுதியில் உரிய நிகழ்ச்சிகளை நடத்துமாறு அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.


2026 மே 30ஆம் திகதி வரும் வெசாக் தினத்தை முன்னிட்டு, அரச வெசாக் விழா மே 27ஆம் திகதி மாத்தறை, திஹகொட மிடெல்லவல புராதன விகாரையில் நடைபெறவுள்ளது.


புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு மற்றும் பௌத்த விவகார திணைக்களம் ஆகியன இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளன.


இந்த நிகழ்ச்சிகளை எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டும் என்பது தொடர்பான அறிவுறுத்தல்களையும், மாதிரித் திட்டம் ஒன்றையும் அமைச்சு வழங்கியுள்ளது.


தத்தமது நிறுவனச் சூழலுக்குப் பொருத்தமான வகையில் இந்த நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துமாறு கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


@CM

Tags

ads