Type Here to Get Search Results !
Developed by Cleverbit

காலநிலை மாற்ற ஆய்வில் புதிய திருப்பம் வியக்க வைக்கும் ஆய்வு!


செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கடல் மேற்பரப்பு நீரோட்டங்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகத் துல்லியமாக அளவிடும் புதிய நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. GOFLOW (Geostationary Ocean Flow) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த முறை, ஏற்கனவே விண்வெளியில் உள்ள வானிலை செயற்கைக்கோள்களின் வெப்பப் படங்களை (Thermal images) பகுப்பாய்வு செய்ய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.


கடல் நீரோட்டங்களை அளவிடுவது காலநிலை மாற்றத்தைப் புரிந்துகொள்ளவும், தேடுதல் ,மீட்புப் பணிகள் மற்றும் எண்ணெய் கசிவுகளைக் கண்காணிக்கவும் மிகவும் அவசியம்.


வழக்கமான செயற்கைக்கோள்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே படம் பிடிக்கின்றன. ஆனால் கடல் நீரோட்டங்கள் சில மணிநேரங்களிலேயே மாறக்கூடியவை.


GOFLOW ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள செயற்கைக்கோள்களைப் பயன்படுத்துவதால், புதிய வன்பொருள்கள் (Hardware) தேவையில்லை. இது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தரவுகளை வழங்கி, மிகச்சிறிய அளவிலான கடல் மாற்றங்களையும் துல்லியமாகக் காட்டுகிறது.


கடலின் ஆழமான பகுதிகளில் உள்ள நீர் மேலெழுவதும், மேற்பரப்பு நீர் கீழே செல்வதும் செங்குத்து கலப்பு எனப்படும். இது 10 கிலோமீட்டருக்கும் குறைவான பரப்பளவில், மிகக்குறுகிய நேரத்தில் நடக்கும் நிகழ்வாகும். 


கடலின் ஆழத்தில் கார்பன் டை ஒக்சைடை சேமிக்கவும், ஆழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களை மேற்பரப்பிற்கு கொண்டு வந்து கடல்வாழ் உயிரினங்களுக்கு உதவவும் இந்த செயல்முறை முக்கியமானது.


GOFLOW தொழில்நுட்பம் இந்த நுட்பமான மாற்றங்களைக் கண்டறிய உதவுகிறது.இந்த ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழக (UCSD & UCLA) விஞ்ஞானிகள் வழிநடத்தினர். இதில் ரோட் தீவு பல்கலைக்கழகத்தின் (URI) நிக் பிசோ மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் பங்கேற்றனர். இதற்கான நிதி உதவியை நாசா (NASA) மற்றும் ஐரோப்பிய ஆராய்ச்சி கவுன்சில் வழங்கியுளள்ளமை குறிப்பிடத்தக்கது.


@CM

Tags

ads