Type Here to Get Search Results !
Developed by Cleverbit

ஜூலை 1ஆம் திகதிக்குள் சிறுவர் முன்பள்ளிகளை பதிவு செய்தல் கட்டாயம்!


எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் நாட்டின் அனைத்து சிறுவர் முன்பள்ளிகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.


எதிர்காலத்தில் ஒரு முன்பள்ளியை ஆரம்பிப்பதற்கு முன்னர் அதனைப் பதிவு செய்வது கட்டாயமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


முன்பள்ளி கல்விக்கான வேலைத்திட்டம் அமைச்சின் பாடப்பரப்பிற்கு அமைய எவ்வாறு செயற்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் மாத்தறை மாவட்ட செயலகத்தில் விழிப்புணர்வு நிகழ்வொன்று நடைபெற்றது.


அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.


@CM

ads