Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நீர் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!


2026 ஆம் ஆண்டின் முதல் 06 மாதங்களுக்கு தற்போதைய நீர் கட்டணங்களை திருத்தமின்றி பராமரிக்க வீடமைப்பு, நிர்மாணம் (கட்டுமானம்) மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.


அதன்படி, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை இயக்குநர் குழு, இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கு நீர் விற்பனை அலகு விலையை உயர்த்தாமல் மாற்றமின்றி அப்படியே வைத்திருக்க முடிவு செய்துள்ளது.


15-07-2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நீர் கட்டண சூத்திரத்தின்படி, முக்கிய செலவுக் காரணிகளில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, நீர் விற்பனையின் அலகு விலை அரையாண்டுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்யப்பட வேண்டும்.


2025 ஆம் ஆண்டிற்கான தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின்படி, தற்போதைய நீர் கட்டணங்கள் முழு இயக்கச் செலவுகளையும் ஈடுசெய்யும் திறன் கொண்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


@CM

Tags

ads